மனைவி இறந்த சோகத்தில் மேட்ரிமோனியில் பெண் தேடிய 70 வயது முதியவர்! வீட்டிற்கு வந்த பெண்ணால் நடந்த சோகம்!
கள்ளக்குறிச்சி அருகே மேட்ரிமோனி மூலமாக 70 வயது முதியவர் வீட்டிற்கு வந்த 49 வயது பெண் முதியவரின் மனைவியின் தாலியை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் கோவிந்தசாமியின் மனைவி வசந்தா கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனால் தனிமையை உணர்ந்த இவர், தனக்கு துணை வேண்டும் என திருமண தகவல் மையம் சென்றிருக்கிறார். அவருடைய விபரங்களையும் பதிவு செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு சீர்காழியை சேர்ந்த 49 வயது விஜயசாந்தி என்பவர் தங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என கோவிந்தசாமிக்கு அழைப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவிந்தசாமி விஜயசாந்தியிடன் செல்போனில் பேசியதை அடுத்து வீட்டிற்கு பெண் பார்க்க சென்றுள்ளார்.
பெண்ணை பார்த்தவுடன் வீடு திரும்பாமல் அங்கேயே இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் இவரை நன்கு கவனித்த விஜயசாந்தி, ஒரு நாள் கோவ்விந்தசாமியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கோவிந்தசாமி நன்கு உறங்கி கொண்டிருந்த நேரத்தில், கோவிந்தசாமியின் மனைவியின் தாலியை திருடி சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி தன் மகன்களிடன் சொல்லி கதறி அழுதுள்ளார். மனைவி மறைந்து ஞாபகமாக வைத்திருந்த தாலியை திருடிவிட்டாள் என்று கதறியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்துநிலையத்தில் நின்று கொண்டிருந்த விஜயசாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்,
மனைவி இறந்ததால் துணை தேடிய முதியவருக்கு, கிடைத்தோ துணையோ இப்படியானதால் அவர்கள் குடும்பமே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.