இரவில் மாணவியர் விடுதிக்குள் புகுந்த இளைஞர் - அறைக்குள் காத்திருந்த அதிர்ச்சி!
மாணவியர் விடுதிக்குள் புகுந்து செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாணவிகள் விடுதி
சென்னை பூக்கடை பகுதியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகளுக்கான விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த மாணவிகளின் அறைக்குள் சென்று செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த மாணவிகள் எழுந்ததால் அந்த மர்ம நபர் சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடியுள்ளார்.
இளைஞர் கைவரிசை
இதனையடுத்து மாணவிகள் தங்களது அறையில் இருந்த பொருட்களை சரிபார்த்துள்ளனர். அப்போது அவர்களின் விலையுயர்ந்த 6 செல்போன்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பூக்கடை காவல் நிலையத்தில் விடுதி மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விடுதிக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் செல்போன்களை திருடிக்கொண்டு ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.