50 லட்ச கடன்...காணாமல் போன ஆவணம்...நடிகர் ராம்கி பரபரப்பு புகார்..!!
தனது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாகவும், திருடு போன ஆவணத்தை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் நடிகர் ராம்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் ராம்கி
தமிழ் சினிமாவில் கடந்த 80 களின் பிற்பகுதியில் அறிமுகமாகி, சிறுது காலத்திலேயே முன்னணி நாயகனாக முன்னேறியவர் ராம்கி. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த இவர் 2004-ஆம் ஆண்டிற்கு பிறகு நடிப்பதற்கு சிறிது பிரேக் விட்டார்.
அதன் பின்னர் மீண்டும், 2013-ஆம் ஆண்டில் துணை நடிகராக அறிமுகமாகி மாசாணி, பிரியாணி போன்ற படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகராக வளம் வருகிறார். தமிழை தாண்டி இவர் தெலுங்கு மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார்.
திருடு போன வீட்டின் பாத்திரம்
இந்நிலையில், தற்போது அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள ஜெமினி பார்சன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் அசல் ஆவணங்களை வைத்ததாகவும், சமீபத்தில் அவற்றைத் தேடிய போது கிடைக்காததால் அதனை கண்டு பிடித்து தருமாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நடிகர் ராம்கி கார்ப்பரேஷன் வங்கியில் இந்த வீட்டினை அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றதும், பின்னர் கடனுக்கு உண்டான தொகையைச் செலுத்தாததால் வீட்டினை ஏலம் விடப் போவதாக வங்கி தரப்பில் நோட்டீஸ் ஒட்டியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி கட்டவில்லை என மாநகராட்சி சார்பில் ராம்கி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதும் குறிப்பிடத்தக்கது.