ராயபுரத்தில் சூப்பர் மார்க்கெட் ஷட்டரை உடைத்து ரூ.7லட்சம் திருட்டு
ராயபுரத்தில் சூப்பர் மார்க்கெட் ஷட்டரை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் கிராசெண்ட் சூப்பர் மார்க்கெட் என்ற கடையை சாகுல்ஹமீது என்பவர் நடத்தி வருகிறார். இவர் அரசின் உத்தரவை அடுத்து நேற்று இரவு 9 மணி வரை கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளார்.
அதன்பின் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவர், இன்று காலை 6 மணி அளவில் கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவிலிருந்த பணம் ரூ. 7 லட்சம் கொள்ளை போனதை அறிந்து சாகுல் ஹமீது ராயபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.