வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, 2 செல்போன் திருட்டு - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்
வீட்டு கதவை உடைத்து திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பாதரக்குடி புறவழிச்சாலை சாலையில் வசித்து வருபவர் வெற்றிவேலன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வெற்றிவேலன் சிங்கப்பூர் செல்வதற்காக நேற்று குடும்பத்துடன் சென்னை ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார்.
இன்று விடியற்காலை வீட்டிற்கு வந்த வெற்றிவேலன், மனைவி சூரியகாந்தி வீட்டில் முன்பக்க கிரில் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டு வாசலில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் துண்டை போட்டு மூடி மர்ம நபர், வீட்டின் உள்ளே அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, 2 விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதனையடுத்து, உடனடியாக சூரியகாந்தி இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.