குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்: சோகத்தில் திரையுலகம்

dead billa2 theepetti ganesan
By Jon Mar 23, 2021 03:37 PM GMT
Report

குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார். தென்மேற்குப் பருவக்காற்று, ரேணிகுண்டா, பில்லா 2, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே போன்ற படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில வருடங்களாகத் திரைப்பட வாய்ப்புகள் சரியாக இல்லாமல் வேறு தொழில்களிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலை மதுரை அரசு மருத்துவமனையில் தீப்பெட்டி கணேசன் காலமானார். இது பற்றி இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில்:

எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறைஇதய அஞ்சலி கணேசா என கூறியுள்ளார்.