விரைவில் தியேட்டர்கள் திறப்பு? - வெளியான சூப்பர் தகவல்
தியேட்டர்களை திறக்க அனுமதிக்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கிற்கு முன்பே தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. ஆனால், தளர்வுகள் வழங்கப்பட்டபோதும் இதுவரை தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திரைத்துறையினரும், திரையரங்கு உரிமையாளர்களும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதனிடையே திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நாளை முதல்வரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைக்க உள்ளனர்.
அதேபோல் கேளிக்கை வரி, உள்ளூர் வரி, சொத்து வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அப்போது அவர்கள் அளிக்க உள்ளனர்