தியேட்டர்கள் திறப்பு: வெளியாகும் சார்பட்டா பரம்பரை - ரசிகர்கள் ஆர்வம்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. 1970-களின் பிற்பகுதியில் வடசென்னையில் பிரபலமாகி இருந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கபிலனாக ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக பசுபதியும், மாரியம்மாளாக துஷாரா விஜயனும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதோடு துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள டான்சிங் ரோஸ் அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர்களோடு டாடி, ரங்கன் வாத்தியார், வேம்புலி ஆகிய கதாபாத்திரங்களும் வித்தியாசமாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. வரும் 23ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதால் படங்களை வெளியிட தயாரிப்பாளர் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

அந்த வகையில் ஓடிடியில் ரிலீசாகி மாபெரும் வெற்றிப்பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’படத்தையும் திரையரங்கில் வெளியிட முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.