ரிலீசான 2 நாட்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படும் பீஸ்ட் திரைப்படம் - உண்மை நிலவரம் என்ன?
பீஸ்ட் படத்திற்கு நிகராக கேஜிஎஃப் -2 படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதால் அந்த படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமும், 14 ஆம் தேதி கன்னட நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் -2 படமும் வெளியானது. வழக்கமாக பீஸ்ட் படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியான நிலையில், முதல் நாளில் இருந்தே கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை அப்படம் சந்தித்தது.
இதனால் தமிழகத்தில் உள்ள 800 திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படம், கேஜிஎஃப் -2 படத்தின் சிறப்பான வரவேற்பால் சிறிது சறுக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளின் எண்ணிக்கை கேஜிஎஃப் -2 படத்துக்கு அதிகரித்து வருவதாகவும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிக எண்ணிக்கையிலான இருக்கை வசதி கொண்ட ஸ்கீரினில் பீஸ்ட் படத்துக்கு பதிலாக கேஜிஎஃப் -2 படம் திரையிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பீஸ்ட் படம் ஹவுஸ்புஃல் காட்சிகளாக தான் சென்று கொண்டிருக்கிறது என்பது டிக்கெட் புக்கிங் இணையதளத்தை பார்க்கும் போது உறுதியாகியுள்ளது.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
