திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கைகளுக்கு அனுமதி
திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கு அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இதனை, பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, மேலும் பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி, முதல், பொதுமக்களும் கண்காட்சிக்குச் சென்று பார்வையிடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தளர்வுகளை, அப்படியே நடைமுறைப்படுத்துவதா? அல்லது சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தொடரலாமா? என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.