தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

theater-tamilnadu-flim-actor-cinima-
By Jon Jan 08, 2021 02:38 PM GMT
Report

தியேட்டர்களில் 100% அனுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டதால் கடந்த அக்டோபர் மாதம்முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரஇருப்பதால் 100% ரசிகர்களை அனுமதிக்குமாறு நடிகர்கள் விஜய், சிம்பு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து தியேட்டர்களில் 100% அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனார். தியேட்டர்களில் மக்கள் அதிகம் கூடினால் மீண்டும் கொரோனா அதிகாமாகும் என எச்சரிக்கை விடுத்தனர். மத்திய அரசும் தமிழக அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தது.

இந்த நிலையில் 50% இருக்கைகள் மட்டுமே திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஆனால் கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.