ஓசூரில் போலீசாரை தாக்க முயற்சி..! இரும்பு அரணாக நின்று பாதுகாத்த இளைஞர்கள்

Tamil nadu Viral Video Tamil Nadu Police
By Thahir Feb 03, 2023 06:08 AM GMT
Report

போராட்டக்காரர்களிடம் சிக்கிய போலீஸ்காரரை இளைஞர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்த மனித நேய வீடியோ காட்சிகள் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மறியல் போராட்த்தின் போது வன்முறை - ஸ்தம்பித்த நெடுஞ்சாலை 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னுமிடத்தில் நேற்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டன.

அப்போது அங்கு வந்த போலீசார் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கொடுக்கவில்லை எனவே கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The youths defended the policeman

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் ஓசூர் முழுவதும் எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 15 கிமீ துாரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு நின்ற அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பாதுகாப்பு அரணாக நின்று போலீஸ்காரதை பாதுகாத்த இளைஞர்கள் 

இதையடுத்து அங்கு வந்த அதிவிரைவுப்படை போலீசார் போராட்டக்காரர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீது அங்கு வன்முறையில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பல் போலீசாரை தாக்க தொடங்கியது.

அப்போது போலீஸ்காரர் ஒருவர் தனது தடுப்புகளை கீழே போட்டுவிட்டு கைகளை உயர்த்தினார் அவரை அந்த கும்பல் தாக்க முயன்ற போது அங்கிருந்த மற்றொரு தரப்பு இளைஞர்கள் அந்த போலீஸ்காரரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

The youths defended the policeman

மேலும் அவருக்கு எந்த காயமும் ஏற்படாமல் இருக்க அந்த இளைஞர் பாதுகாப்பு அரணாக சுற்றி நின்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. போராட்டக்களத்தில் இளைஞர்களின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.