I Love u சொன்ன இளைஞர் - பதிலுக்கு Me Too கூறிய சீமான்

Naam tamilar kachchi Seeman Erode
By Thahir Feb 25, 2023 12:30 PM GMT
Report

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது இளைஞர் ஒருவர் I Love u கூறிய போது சீமானும் Me Too எனக் கூறியதால் மேடையில் சிரிப்பலை எழுந்தது.

ஓய்ந்தது தேர்தல் பரப்புரை 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த தொகுதியில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியோடு ஓய்ந்தது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனாகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சீமானின் பேச்சால் சிரிப்பலை 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவிற்கு ஆதரவாக வாக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் மக்களிடம் வாக்கு கேட்டு பேசினார்.

The young man who fell in love with Seeman

அப்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பல ஆண்டுகளாக வாக்கு அளித்து விட்டீர்கள் இனி நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்க. ஒரு ஓட்டு போடுங்க..என மக்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

அப்போது இளைஞர் ஒருவர் I Love u கூறிய போது சீமானும் Me Too எனக் கூறியதால் மேடையில் சிரிப்பலை எழுந்தது.