லிஃப்டில் தனியாக சென்ற பெண் முன்பு ஆடைகளை கழட்டி சில்மிஷம் செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் இளம்பெண்ணுக்கு லிஃப்டில் நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் ஏராளமான குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு காய்கறி டெலிவரி செய்வதற்காக சூளையைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்ற இளைஞர் வந்திருக்கிறார்.
6-வது தளத்தில் உள்ள வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்துவிட்டு கடைக்கு திரும்பி இருக்கிறார். இதற்காக 6ஆவது மாடியில் இருந்து லிஃப்டில் வரும்போது வீட்டு வேலை செய்து வரும் பெண் லிப்டில் ஏறி இருக்கிறார். இருவர் மட்டுமே லிஃப்டில் தனியாக இருந்ததால், அப்பெண்ணின் முன்பு இளைஞர் விக்னேஷ் தனது ஆடைகளை முழுவதுமாக கழட்டி ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக் கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதனையடுத்து, வீட்டு உரிமையாளரிடம் தகவல் சொல்ல, அவர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார்.
உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர் விக்னேஷை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.