உலகின் மிகப் பெரிய டைனோசர் இனம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு! அதன் பெயர் என்ன தெரியுமா?

australia dinosaur worldlargest
By Irumporai Jun 09, 2021 11:38 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆஸ்திரேலியாவில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை பண்ணை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

தற்போது அது கூப்பர் என்ற புதிய டைனோசர் இனம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவைதான் பூமியிலேயே பெரிய டைனோசர்இனம்  என அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இந்த கூப்பர் இன டைனோசர்கள் ஆஸ்திரேலியா அண்டார்டிக்காவுடன் இணைந்த பகுதியாக இருந்த போது வாழ்ந்திருக்கலாம் எனகூறுகின்றனர்.

இவை தாவரங்களை உண்டு வாழ்ந்திருக்கலாம் எனக் கூறும் விஞ்ஞானிகள்  இதன் நீளம் (25 முதல் 30 மீட்டர் நீளம் அதாவது  இரண்டு மாடி அளவிற்கு  உயரமானதாகவும் இருந்திருக்கலாம் என  தெரிவித்துள்ளனர்.