அமெரிக்காவில் சாத்தான் வேடத்தில் வந்து ரயிலில் கொள்ளையடித்த பெண்கள்

Viral Video United States of America
By Thahir Oct 05, 2022 10:58 AM GMT
Report

அமெரிக்காவில் சாத்தான் உடையில் ரயிலில் பெண்களை தாக்கி கொள்ளையடித்த பெண்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ரயிலில் கொள்ளையடித்த பெண்கள் 

அமெரிக்காவின் பிரபலமான டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரெயிலுக்குள் சாத்தான் போன்று உடையணிந்த 6 பெண்கள் பயணிகளை தாக்கி கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் சாத்தான் வேடத்தில் வந்து ரயிலில் கொள்ளையடித்த பெண்கள் | The Women Who Robbed The Train In America

நியூயார்க்கில் பச்சை நிற உடையில் சாத்தான் போன்று உடலை இறுக்கிய ஜிம்ப்சூட் ஆடையில் வந்த 6 பெண்கள் அதிகாலை 2 மணியளவில் ரெயிலில் தனியாக இருந்த 19 வயது பெண்ணை தாக்கி கொள்ளையடித்தனர்.

இதே போன்று இன்னொரு பெண்ணிடமும் பர்ஸ் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் இரு பெண்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.