ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வந்த தீர்ப்பு - கண்ணீர் விட்டு கதறிய பெண் தொண்டர்கள்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir 1 மாதம் முன்

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

அதிரடி தீர்ப்பு 

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வந்த தீர்ப்பு - கண்ணீர் விட்டு கதறிய பெண் தொண்டர்கள் | The Women Volunteers Burst Into Tears

இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை இந்த ஆண்டு இனி கூட்ட முடியாது.

ஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டவேண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுடன் தான் பொதுக்குழு கூட்டப்படவேண்டும்.

பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆணையரை நியமிக்க வேண்டும் ஜூன் 23"ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது.

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லாது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பிலும் செய்யப்பட்ட புதிய பதவி நியமனங்கள் செல்லாது கட்சியிலிருந்து நீக்கி இருதரப்பிலிருந்தும் நீக்கப்பட்ட உத்தரவுகளும் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கண்ணீர் விட்டு கதறிய பெண் தெண்டர்கள் 

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வந்த தீர்ப்பு - கண்ணீர் விட்டு கதறிய பெண் தொண்டர்கள் | The Women Volunteers Burst Into Tears

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரின் இல்லம் முன் திரண்டு பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது பெண் தொண்டர் ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.