வீட்டில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர் - திரையுலகினர் அதிர்ச்சி
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் கே. வில்லியம்ஸ் நியூயார்க்கில் இருக்கும் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The Wire என்ற தொலைக்காட்சி தொடரில் ஒமர் லிட்டில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மைக்கேல் கே. வில்லியம்ஸ் அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் இருக்கும் ப்ருக்லின் பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தனது உறவினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் கலந்து கொள்வதாக தெரிவித்த நிலையில் மைக்கேல் அதில் பங்கேற்கவில்லை. இதனால் குறிப்பிட்ட அந்த உறவினர் செப்டம்பர் 6 ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்று பார்த்தப்போது தான் மைக்கேல் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
54 வயதான மைக்கேல் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் வீட்டு சமையல் அறையில் இருந்த மேஜையில் போதைப் பொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு போதைப் பொருள் பிரச்சனை இருந்தது குறித்து மைக்கேல் வில்லியம்ஸ் ஏற்கனவே வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மரணம் ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.