அடிக்கடி கள்ளக்காதலனுடன் உல்லாசம்..கணவனுக்கு சாப்பாட்டில் மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற மனைவி..!

India Rajasthan
By Thahir May 21, 2022 03:18 AM GMT
Report

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்து வந்த மனைவி தன் கணவனை சாப்பாட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் லால் சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாந்த் சென் கிராமத்தில் ஓம் பிரகாஷ் குர்ஜார் என்பவருக்கும் ரெஸ்டா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

அடிக்கடி கள்ளக்காதலனுடன் உல்லாசம்..கணவனுக்கு  சாப்பாட்டில் மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற மனைவி..! | The Wife Who Killed Her Husband

இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளத.ஓம் பிரகாஷ் மனைவி ரெஸ்டாவுக்கு பின்டு என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதனிடையே இவர்களின் பழக்கம் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் தன் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.

கணவர் ஓம் பிரகாஷ் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.இதை பயன்படுத்தி கொண்ட மனைவி ரெஸ்டா கள்ளக்காதலன் மூலம் துாக்க மாத்திரைகளை வாங்கி வந்தார்.

திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய கணவருக்கும்,மாமியாருக்கும் வகை வகையாக உணவு சமைத்து போட்டுள்ளார். இதை சாப்பிட்ட இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

அடிக்கடி கள்ளக்காதலனுடன் உல்லாசம்..கணவனுக்கு  சாப்பாட்டில் மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற மனைவி..! | The Wife Who Killed Her Husband

பின்னர் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். ஓம் பிரகாஷ் படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சமையலறையில் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி ரெஸ்டா உணவில் துாக்க மாத்திரையை கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது.