கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!
தூத்துக்குடி, பேரூரணி பகுதியில் வசித்து வந்தவர் கருப்பசாமி(36). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
நடந்தது என்ன?
லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று வரும் கருப்பசாமி மூன்று மாதங்களுக்குப் பின்னர் கடந்த 7ஆம் தேதியன்று ஊருக்கு வந்திருக்கிறார். இரவில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கியிருக்கிறார்.
அப்போது மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த கருப்பசாமி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார்.
திட்டமிட்டு கொலை
தகவலறிந்த தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கருப்பசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளியை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
கருப்பசாமி கொலை தொடர்பாக அவரது மனைவி கனகலட்சுமி இடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லி இருக்கிறார் .
இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவரது செல்போனை எடுத்து ஆய்வு செய்தபோது ஒரு நம்பரில் இருந்து அடிக்கடி கனகலட்சுமிக்கு அழைப்பு வந்திருக்கிறது.
அந்த என்னை ஆய்வு செய்தபோது ரவிச்சந்திரன் என்ற பெயரின் உள்ளது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து ரவிச்சந்திரன் யார் என்று தனலட்சுமியிடம் விசாரணை நடத்தியபோது உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தனது உறவினர் தான் ரவிச்சந்திரன். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் எனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது . கடம்பூர் மகளிர் காவல் நிலையம் வரைக்கும் இந்த பிரச்சனையை சென்றது.
அந்த சமயத்தில் சோழபுரத்தை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் என்பவர் எனக்கு உதவி செய்தார் பின்னர் அடிக்கடி என்னிடம் செல்போனில் பேசியுள்ளார். இதை தெரிந்துகொண்ட கருப்பசாமி கண்டித்தார்.
கணவரின் தொல்லை அதிகரிக்கவே அவர் இருக்கும் வரை ரவிச்சந்திரனுடன் உல்லாசமாக இருக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் சொல்லி புலம்பினேன்.
அப்போதுதான் அவர் கருப்பசாமியை கொன்றுவிடுவதாக எனக்கு வாக்கு கொடுத்தார். அதன்படியே திட்டமிட்டு கருப்பசாமி வந்ததும் வாசலில் படுத்து இருந்தபோது ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தேன்.
அவர் பைக்கில் வந்து வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு சென்றுவிட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த கருப்பசாமியின் மனைவி கனகவல்லியை போலீசார் கைது செய்துள்ளனர்.