மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளுக்கே சவால் விட்ட தமிழ் மன்னர்களின் ஆயுதங்கள்
உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் பலத்தினை நிறுவ, அதன் இராணுவ ஆயுதங்களையே நம்புகின்றன. எந்த ஒரு நாடு இராணுவ ஆயுதபலத்தில் பின்தங்கி உள்ளதோ, அவற்றை தங்கள் வணிகத்தலமாக மாற்றவும் முனைப்போடு செயலாற்றுகின்றன.
அதில் பலம் பொருந்திய மற்ற நாடுகள். மனிதன் நாகரிகம் எனும் சொல்லறியா காலத்தில், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்த துவங்கியவை இவ்வாயுதங்களெனில், உலகின் தொன்மையான மனித கண்டுபிடிப்பும் இவையாகத்தான் இருக்க முடியும். ஆயுதங்கள் எனும் சொல்லிற்கு, தமிழில் போர்க்கருவிகள் என்று கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் இரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்கினார்கள் ,ஆம் உலகநாடுகளுக்கே இரும்பு உலோகங்களை அறிமுகம் செய்து வைத்தவர்கள் தமிழர்களா? ஆம் என்பதுதான் உண்மை. இது குறித்து வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் ஐபிசி தமிழுக்கு அளித்த பேட்டி உங்களுக்காக