அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா வேண்டுமென்றுதான் பேசினார் - மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!
அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா வேண்டுமென்று எதுவும் பேசவில்லை என மத்திய இணை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர்
சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,’’ அசாம் ரைப்பில் கிளப், இந்தியத் திபெத்தியன் எல்லை பாதுகாப்பு சி.ஆர்.பி.எப் படை, வங்கிகள் உள்ளிட்ட பணிகளில் தேர்வான 413 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்று கூறிய அவர் ஒரு தேர்தலுக்கு அரசு 10,000 கோடி ரூபாய் செலவிடுகிறது. அமைச்சர்கள் வேறு தொகுதிக்குச் சென்று பணியாற்றக்கூடிய சூழல் உள்ளது.
மத்திய அமைச்சர்
இதனால் அரசிற்கு இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார்.இதனையடுத்து அம்பேத்கர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர் அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா வேண்டுமென்று பேசவில்லை .
வேண்டுமென்றுதான் பேசினார் எனக் கூறுவதைத் தவிரக் காங்கிரசுக்கு வேறென்ன இருக்கப் போகிறதென்று கூறினார். மேலும் இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் திசைதிருப்புவதாகக் குற்றம் சாட்டினார்.