எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்... கலவரமான பொலிவியா நாடாளுமன்றம்

parliment troubled bolivian
By Irumporai Jun 09, 2021 09:13 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பொலிவியா நாட்டின்  நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அடித்து தாக்கிக் கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஈவோ மொராலஸ்  அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் நடந்ததாகக்கூறி ஈவோ மொராலஸிற்கு எதிராக நாடு முழுவதும்  கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில்33 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக மொராலஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் நடைபெற்ற தேர்தலில் ஈவோ மொராலஸி-ன் கட்சிதான் வெற்றி பெற்றது

. இந்த நிலையில் நாடாளமன்ற கூட்டத்தில் 33 பேர் கொல்லப்பட்டதற்கு  எதிர்கட்சியைச் சேர்ந்த ஹென்ரி ரோமேரியோ நாடாளுமன்றத்தில் வாக்குவாதம் நடத்தினார்.

அப்போது, வாக்கு வாதம் கைகளப்பாக மாற  ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.