ஒடிசா ரயில்கள் விபத்து - பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒடிசா ரயில் விபத்து
கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலானது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அருகில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்தது.
அந்த சமயம் எதிரே மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது தடம்புரண்டு கிடந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி 3 ரயில்களும் பெரும் விபத்துக்குள் சிக்கின.
அதிகரிக்கும் உயிரிழப்பு
சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்து விட்டனர். அவர் ரத்தக்காயங்களுடன் பலத்த காயமடைந்து உள்ளனர். இன்னும் பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்த தகவல் வரை இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து மீட்புப்பணிக்காக வீரர்கள் சென்று உள்ளனர். மத்திய அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    