மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? - மதுரை உயர்நீதிமன்ற கிளை
மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசுக்கு கேள்வி
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.
அப்போது, மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என்றும் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பிற மாநிலங்களை விட குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது எனவும் கூறினர்.
கொரோனா காலத்தில் வெளிமாநிலத்தில் இருந்து மது வாங்கி வந்ததால் 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுவிற்பனை தடுத்த எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தர நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.