‘‘அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’.. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் கே.எஸ். அழகிரி

tamilnadu dmk alagiri congress neet
By Irumporai Jun 07, 2021 10:05 AM GMT
Irumporai

Irumporai

in கல்வி
Report

அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்:

  நீட் தேர்வால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் அநீதி நடைபெறுகிறது.

புள்ளிவிவரங்களின் படி, கடந்த 15 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்களே மருத்துவக் கல்லூரியில் சாதித்துள்ளனர் ஆனால் அவர்களுக்கு நீட் தேர்வினால் அநீதி அதிகரித்துள்ளது.

இதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டும் அரசுப் பள்ளியில் படிக்க 405 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

ஆகவே இது போன்ற அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அநீதியை போக்குவதற்கான முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு மாற்றாக வேறு எந்த வகையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்