வீடு புகுந்து பிரபல நாடக நடிகையை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..!

1 மாதம் முன்

காஷ்மீரில் பிரபல நாடக நடிகை அம்ரீன் பட்டை பயங்கரவாதிகள் வீடு புகுந்து சுட்டுக்கொன்றனர்.

காஷ்மீரில் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரீன் பட்.இவர் காஷ்மீர் பட்கம் மாவட்டம் ஹிஷோரோ என்ற பகுதியில் உள்ளது.

வீடு புகுந்து பிரபல நாடக நடிகையை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..! | The Terrorists Who Shot The Famous Drama Actress

இந்நிலையில் இன்று இரவு அவரின் வீட்டுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அம்ரீன் பட் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

அவருடன் இருந்த 10 வயது சிறுமி மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த நடிகை அம்ரீன் பட்,சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நடிகை அம்பிரீம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.