“டிரெஸ் இல்லாம இருந்தா இன்னும் அழகா இருப்பே” மாணவிக்கு மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் - லாடம் கட்டும் போலீசார்
மாணவிக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கத்திரிப்புலம் கிராமத்திலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர் அசோகன்.இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரின் டியூசன் சென்டரில் படிக்கும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரிடம் அத்துமீறிய செய்திகள் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஆசிரியர் அசோகன் தனது டியூசன் சென்டருக்கு மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறிய கர்ப்பமாக்கிய நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பட்டிமன்றம், ஆன்மிகச் சொற்பொழிவு என்று நல்லவன் போன்று வேஷம் போட்டுக்கொண்டு தன்னிடம் கல்வி கற்க வரும் மாணவிகளிடம் அசோகன் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர் தனது வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து மாணவிக்கு கரு கலைப்பும் செய்திருக்கிறார் என்ற தகவல் அதிர்வடைய வைக்கிறது.
தன் பள்ளியில் படிக்கும் நிறைய மாணவிகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் மூலம் . ‘நீ டிரெஸ் போட்டா அழகா இருப்பே. டிரெஸ் இல்லாம இருந்தா இன்னும் அழகா இருப்பே. மேல டிரெஸ் போடாம ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பு’ என்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் நிறைய இருக்கலாம். எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயத்தில் பலரும் புகார் சொல்லத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
முத்தம் கொடுத்தது தப்பா? - ஆசிரியர்
இந்த நிலையில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட அசோகன் மீது 18 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.
அதில் 2 மாணவிகள் ஆசிரியர் அசோகனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
போலீசாரின் விசாரணையின் போது ‘விளையாட்டுல, படிப்புல முதலிடம் வர்ற மாணவிகளைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துப் பாராட்டுவேன். இது தப்பா?’என தெனாவெட்டாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அசோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
அசோகனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினர் நல்லவன் போல் வேஷம் போட்டுக்கொண்டு அப்பாவி மாணவிகளிடம் அத்துமீறியிருக்கிறான். இவனுக்கு சட்டம் சரியா தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.