அழிய போகிறதா உலகம்? சூரியன் உடைந்தது - ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

By Thahir Feb 11, 2023 07:10 AM GMT
Report

சூரியனில் உள்ள ஒரு பகுதி திடீரென தனியாக உடைந்து அதன் மேற்புரத்தில் சுற்றி வருவதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆய்வாளர்கள் அதிர்ச்சி 

பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் சூரியனை சுற்றி வருகிறது என்பது அனைவரும் பள்ளியிலேயே படித்திருக்கிறோம்.

பூமியில் வாழும் உயிரினங்களுக்கு சூரியன் தான் அடிப்படை என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் சூரியன் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

The sun broke - researchers shocked

வழக்கம் போல அமெரிக்காவின் நாசா தான் சூரியன் குறித்த ஆய்வில் முதலில் இருக்கிறது. பல கோடி மைல் தொலைவில் இருக்கும் இந்த சூரியனை ஆய்வாளர்கள் இங்கிருந்தபடியே ஆய்வு செய்து வருகின்றனர்.

சூரியனில் நிகழ்ந்துள்ள ஒரு மாற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்னர். இந்த மாற்றத்தை கண்டு அவர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

அந்த ஆய்வில், சூரியனின் பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்ற சுழற்சியை உருவாக்கியுள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்ற ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் படம் பிடிபக்கப்பட்டுள்ளது.

சூறாவளியை ஏற்படுத்தும் சூரியன் 

இது பற்றி ஆராய்ச்சியாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார். சூரியனில் இருந்து எப்போதும் சோலார் பிளார்ஸ் வெளியாகும்.

இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல் தொடர்புகளை கூட பாதிக்கும். எனவே சூரியனில் என்ன நடந்தாலும் அது ஆய்வாளர்களுக்கு கவலையே ஏற்படுத்தும்.

The sun broke - researchers shocked

இந்த நிலையில் ஆராய்ச்சியாளர் தமிதா ஸ்கோவ் சூரியனின் வடக்கின் முக்கிய பொருள் பிரிந்து இப்போது நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வட துருவத்தைச் சுற்றி ஒரு பெரிய சூறாவளி போன்ற ஒன்றை உருவாக்கி வருகிறது.

அங்கு ஏன் இப்படி நடந்துள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம். என்று பதிவிட்டுள்ளார். சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளிப்புறமாக விரிவடையும்.

கடந்த காலங்களிலும் இது போல பல நிகழ்வுகள் நடந்துள்ளன ஆனால் இந்த முறை அது தனியாக வந்த பெரிய சுழலை உருவாக்கியதே ஆய்வாளர்களை திகைக்க வைக்கிறது.   

24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் சூரியன் 

தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சூரியன் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்க தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ஸ்காட் மெக்கின்டோஷ் இது குறித்து பேசுகையில், சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடையும் போது இவ்வளவு பெரிய சுழல் ஏற்படுவதை நான் ஒரு போதும் பார்த்ததே இல்லை என்றார்.

ஏன் இப்படி நடந்துள்ளது? இதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் சூரியனை அவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

The sun broke - researchers shocked

இம்மாத தொடக்கத்தில் சூரியனில் இருந்து வந்த சக்தி வாய்ந்த சோலார் ப்ளேர் (Solar Flare) பூமியில் தகவல் தொடர்பைத் தற்காலிகமாக துண்டித்தது.

பூமிக்கு ஆபத்து ஏற்படுமா? 

சூரியனின் ஒரு பகுதி இப்படி தனியாக பிரிந்ததால். பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் காந்தப்புலன் தலைகீழாக மாறும். என்பதால் அதற்கும் இப்போது ஏற்பட்டுள்ள நிகழ்விற்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வில் இறங்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.