காதலனால் கர்ப்பம்..யூடியூப் பார்த்து கருக்கலைப்பு? - வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மாணவி

Youtube Andhra Pradesh Death
By Thahir Apr 17, 2023 05:26 AM GMT
Report

ஆந்திராவில் தனியார் பொறியில் கல்லுாரியில் 19 வயது மாணவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மாணவி 

ஆந்திரா மாநிலம் நெல்லுாரில் உள்ள தனியார பொறியியல் கல்லுாரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி ஒருவர் கடந்த 11ந் தேதி வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் 6 மாத சிசு உடன் உயிரிழந்த நிலையில் இறந்தது குறித்து கல்லுாரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லுார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The student found dead in the classroom

மாணவி கருக்கலைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாரா அல்லது யூடியூப் பார்த்து சொந்தமாக கருக்கலைப்பு செய்து கொள்ளும் போது மரணம் அடைந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி வைத்திருந்த செல்போனை கைப்பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவிக்கும் அனந்த சாகரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநருக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.