அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - போராட்டக்காரர்கள் அறிவிப்பு..!

Gotabaya Rajapaksa Sri Lanka SL Protest
By Thahir May 10, 2022 08:08 PM GMT
Report

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்த நிலையில் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட துவங்கினர்.

இந்நிலையில் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்சே வீடு மற்றும் எம்.பிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.

இதனிடையே பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் கண்டதும் கூட அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிரதேச சபை தலைவர் வீட்டை முற்றுகையிட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.