சுவாசிக்க முடியவில்லை..! ஊரைச் சுற்றிலும் வீசும் பிணங்களின் துர்நாற்றம் - துருக்கியில் கோரத்தாண்டவம் ஆடிய பூகம்பம்
துருக்கியில் பூகம்பம் நடத்திய கோரத்தாண்டவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஊரைச் சுற்றிலும் துர்நாற்றம்
கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது. பூகம்பம் ஏற்படுத்திய கோரத்தாண்டவத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இதில் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 10 நாட்களை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 41 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனிடையே பூகம்பம் ஏற்பட்டு 10 நாட்களை நெருங்கும் நிலையில், ஊரெங்கும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளோர்களின் அபாயக் குரல்கள் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள்
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள சல்மான் அல்தீன் என்பவர் பேசுகையில், நான் அன்டா்ககியா பகுதியில் கடந்த ஒரு வாரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
நான் இத்தனை மரணங்களை இவ்வளவு உடல்களையும் என் ஆயுளில் பார்த்ததில்லை. அர்கமடான் படத்தில் வரும் காட்சிகள் போல் இங்கே நிலைமை இருக்கிறது. இந்த நகரம் முழுவதுமே பிண துர்நாற்றம் வீசுகிறது. என்று அழுகையுடன் தெரிவித்தார்.

துருக்கி, மற்றும் சிரியாவில் குழந்தைகள் பலரும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் தாங்கள் வாழ்ந்த வீடு, உடைமைகளை இழந்து தெருக்களில் தஞ்சமடைந்தது, மிகப் பெரிய சத்தம், கட்டிட இடிபாடுகள் என அவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.