அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டம் : இன்று கூடும் இலங்கை நாடாளுமன்றம்

parliment srilankan SrilankaCrisis
By Irumporai Apr 05, 2022 03:52 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கையில் இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.  

இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கையில் தற்போது எரிபொருள் கடும் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது.

அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டம் : இன்று கூடும் இலங்கை நாடாளுமன்றம் | The Sri Lankan Parliament Today Amid A Severe

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிற்து,பொருளாதார பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.