தமிழக மண் காவிக்கு சாவு மணி அடிக்கிற மண்ணாக தான் நீடிக்கும் - கே.பாலகிருஷ்ணன்
சென்னையில் வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்பட்டது.
சிறுபான்மை மக்கள் ஒவ்வொரு வினாடியும் தாக்கப்படுகிறார்கள்
இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்தியாவில் ஒரு கருப்பு தினமாக அமைந்திருக்க கூடிய நாள் தான் இந்த டிசம்பர் 6.
பாரதிய ஜனதா கட்சி என்ற பேய் கூட்டத்திற்கு சவாலாக சொல்லுவோம். இடிக்கப்பட்டது பாபரி மஸ்ஜித் ஆக இருந்தாலும், இனிமேல் இந்தியாவில் மத வழிபாட்டு தளத்தை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற ஒரு தினமாக தான் இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம் என்றார்.

மத்தியில் இருக்கக் கூடிய ஆட்சியாளர்கள் எவ்வளவு அந்நியாயங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியா கடந்து போகிற ஒவ்வொரு வினாடியும் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதாகம், அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதாக தெரிவித்தார். எங்கே எல்லாம் பிஜேபி ஆட்சி இல்லையோ அங்கெல்லாம் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.
எங்கே எல்லாம் பிஜேபி ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
தமிழகம் காவிக்கு சாவு மணி அடிக்கிற மண்ணாக நீடிக்கும்
கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆடை விவகாரத்தை வைத்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்ற ஆணையை போடுகிறார்கள்.
ஆடை அடையாளம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை பிஜேபி தீர்மானிக்க வேண்டுமா? யார் எப்படி ஆடை அணிய வேண்டும் என்ற கோத்திரங்களை நீங்கள் வகுப்பதை இந்திய நாடு கேட்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தை ஒரு மத கலவர பூம்மியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டை மதவெறி சக்திகள் ஆட்டிப்படைக்க நினைக்கிறார்கள்.
ஒரு பக்கம் அண்ணாமலை, இன்னொரு பக்கம் ஆளுநர் ரவி, இன்னொரு பக்கம் மத்திய அமைச்சர்கள் வேக வேகமாக தமிழ்நாட்டின் மீது படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் எவ்வளவு வேகமாக படையெடுத்து வந்தாலும், தமிழக மண் ஒரு போதும் காவி மண்ணாக மாறாது காவிக்கு சாவு மணி அடிக்கிற மண்ணாக தான் நீடிக்குமே தவிர காவி மண்ணாக மாறது என பேசினார்.