சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர்
சொன்னதை செய்யாவிட்டால் குறிப்பிட்ட நாளில் ராஜினாமா செய்கிறேன் என நாதக வேட்பாளர் ராஜசேகரன் கையெழுத்திட்ட பத்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சூ.ராஜசேகரன் போட்டியிடுகிறார்.
இவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று செஞ்சேரிமலை முருகன் முன்பு நூறு ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழி எழுதினார்.

இதனைதொடரந்து, அந்த பத்திரத்தை செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராசாமி அடிகளாரிடம் சமர்பித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் நியாய விலைக்கடையில் தேங்காய் எண்ணெய் விநியோகம், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் மின்சார வசதி, தொகுதியில் புதிய அரசு கலை கல்லூரி, வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றுதல், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று எழுதியுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அதில் எழுதியிருந்தார்.
இந்நிலையில், வேட்பாளர் ஒருவர் எழுத்துப்பூர்வனமான உறுதிமொழியை வழங்கியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.