விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்ட பாலியல் அழகி பாக்யலட்சுமி
சென்னையில் விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டா வெட்டிக் கொலை செய்து உடலை சூட்கேசிலும், கட்டைப்பையிலும் எடுத்துச் சென்று புதைத்த பாலியல் தொழில் அழகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாயமான விமான நிறுவன ஊழியர்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன் 29 வயதாகும் இவர் சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் சென்னையை அடுத்த நங்கநல்லுார் என்.ஜி.ஓ சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி மதியம் தனது அக்கா வீட்டில் இருந்து வேலைக்காக செல்வதாகும் அப்படியே பணி முடிந்ததும் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு போய்விட்டு வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
பின்னர் ஜெயந்தனிடம் இருந்து எந்த செல்போன் அழைப்பும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது அக்கா பழவந்தாங்கல் போலீசில் தனது தம்பியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
செல்போன் சிக்னலை வைத்து பிடித்த போலீசார்
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜெயந்தனின் செல்போனின் சிக்னலை வைத்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
அப்போது ஜெயந்தனின் செல்போன் சிக்னல் கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் சென்று பாக்கியலட்சுமி என்ற 38 வயது பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் அந்த பெண் தனக்கு முதலில் எதுவும் தெரியாது என்று மறுத்திருக்கிறார். பின்னர் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்
ஜெயந்தனின் உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப்பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்துச் சென்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் பாக்யலட்சுமி.
இந்த கொலை சம்பவத்திற்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் பாக்யலட்சுமி கூறியிருக்கிறார்.
மேலும் பாக்யலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என்னை ஜெயந்தன் தாம்பரத்தில் உள்ள ஒரு விடுதியில் முதலில் சந்தித்தார். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவிலில் வைத்து என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு நான் ஜெயந்தனை விட்டு பிரிந்து விட்டேன்.
இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறில் ஈடுபட்டார். தகராறில் வாக்குவாதம் முற்றி அவரை நான் கொன்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனிப்படை போலீசார் பாக்யலட்சுமியை கைது செய்து சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்து விசாரித்தனர்.
மேலும் ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.