இரண்டாவது திருமணம் செய்தார் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் - பெண் யார் தெரியுமா?

D. Imman
By Thahir May 15, 2022 06:42 PM GMT
Report

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.டி.இமான் மோனிகா ரிச்சர்டை திருமணம் செய்த நிலையில் 13 ஆண்டுகள் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மோனிகாவை முறைப்படி விவாகரத்து செய்தார். இதையடுத்து தன் பெற்றோரின் கோிக்கையை ஏற்று இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனிடையே தனது முதல் மனைவி ரிச்சர்டை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து சட்டப்படி விவாகரத்து செய்தார்.

மறைந்த கோலிவுட்ட கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை டி.இமான் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் இருவீட்டார்,நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகை சங்கீதா தன் கணவர் க்ரிஷுடன் வந்திருந்தார்.

நடிகை குட்டி பத்மினியும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விவாகரத்தான பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.