கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
தமிழ்நாட்டில் கோடை கால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் கல்வி பயின்று வந்த மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதேசமயம் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த வகுப்புகளுக்கு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விடைத்தாள் திருத்தும்பணி , ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் போன்றவை காரணமாக ஜூன் மாதம் இறுதியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.