Wednesday, Apr 2, 2025

ஹிஜாப் அணிவதற்கு நோ சொன்ன பள்ளி தலைமை ஆசிரியர் - வீடியோவால் புதிய சர்ச்சை

Tamil nadu
By Thahir 3 years ago
Report

சாத்தான்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஒருவரை தலைமை ஆசிரியர் புர்கா அணிந்து வரக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைமையாசிரியர் அனுமதி மறுப்பு 

இதையறிந்த அந்த மாணவியின் தாய் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் தமிழக அரசு அப்படி ஒன்றும் உத்தரவு போடவில்லை நிரூபித்தால் அனுமதிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிஜாப் அணிவதற்கு நோ சொன்ன பள்ளி தலைமை ஆசிரியர் - வீடியோவால் புதிய சர்ச்சை | The School Headmaster Said No To Wearing Hijab

அதற்கு அந்த தலைமையாசிரியர் பள்ளிக்குள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் அதில் அளித்துள்ள தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிந்து கல்வி பயில தடை ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.