திரைப்படங்களை மிஞ்சிய கொள்ளை சம்பவம் ..10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள் ..அதிர்ச்சியில் காவல் துறையினர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் நகைக்கடை ஒன்றில் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
நகைக்கடை கொள்ளை
நகைக்கடை பியுஷ் கார்க் என்ற நபர் மீரட் நகரில் நகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் .சம்பவத்ததன்று செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் நகைக்கடைக்கு சென்று கடையை திறந்து பார்த்த பியுஷ் கார்க் ,கடையில் இருந்த ரூ .15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனதை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார் .
பத்து அடி நீளத்திற்கு சுரங்கம்
இந்த கொள்ளை சம்பவம் குறித்து நாவுசாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பியுஷ் கார்க் . இதனையடுத்து போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது .
கொள்ளையர்கள் நகைக்கடைக்குள் நுழைவதற்காக சுமார் 10 அடி நீளத்திற்கு பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . அந்த நகைக்கடைக்குள் செல்லும் சாக்கடைக் குழாயை சுரங்கம் தோண்டுவதற்காக பயன்படுத்தி உள்ளார்கள் .
சாக்கடைக் குழாய் சுவர்கள் மிகவும் பலவீனமாக இருந்ததால் சுவரின் செங்கலை எடுத்து விட்டு பின் மண்ணை தோண்டி கடைக்குள் நுழைந்துள்ளார் .திங்கள் கிழமை இரவு தோண்ட ஆரம்பித்து செவ்வாய் கிழமை அதிகாலையில் கொள்ளை சம்பவத்தை நடத்தி முடித்துயுள்ளார்கள் .
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மாயமாகியுள்ளார்கள் . அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.