நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன்...உங்கள் சொற்படியே நடக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin M Karunanidhi DMK
By Thahir Aug 28, 2022 07:45 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5 வது ஆண்டு தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் நெகிழ்ச்சி 

திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 5 வது ஆண்டில் அடித்து எடுத்து வைத்துள்ளார்.

M K Stalin

இதையடுத்து அவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

தகைசால் தந்தையே!

தன்னிகரற்ற தலைவரே!

முதல்வர்களில் மூத்தவரே! 

கலையுலக வேந்தரே!

எங்களின் உயிரே! உணர்வே!

தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன்.

உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்!

மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்!