தனுஷ், ஐஸ்வர்யா பிரிய இதுதான் காரணமா? - குழப்பத்தில் ரசிகர்கள்

dhanush தனுஷ் ஐஸ்வர்யா aishwaryrajinikanth
By Petchi Avudaiappan Feb 09, 2022 11:40 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் தனுஷ் - இயகுநர் ஐஸ்வர்யா பிரிவு குறித்து அடுத்தடுத்து புதிய தகவல்கள் உலா வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது புதிய படங்களில் ஏதும் நடிக்காமல் ஓய்வில் உள்ளார். இதற்கிடையில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா - நடிகர் தனுஷ் விவாகரத்து நிகழ்வு அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் பிரிவு குறித்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் பிரிவு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது. 

அந்த வகையில் ஐஸ்வர்யா முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் எங்கள் உறவின் சிறந்த விஷயமே நாங்கள் ஒருவருக்கொருவர் அதிக ஸ்பேஸ் கொடுப்பது தான். ஒன்றாக இருப்பதற்காக அடுத்தவரை தனக்கு பிடித்தது போன்று மாற்ற நினைக்காதவர்கள் நாங்கள் என்றார்.

இதுதான் அந்த ஸ்பேஸ் அதிகமாகி அவரவர் தனித்தனியாக வாழ்வதில் நிம்மதி அடைந்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.ஆனால் விவாகரத்துப் பிறகு தனுஷ் புதிய படங்களில் நடிப்பதாகவும், ஐஸ்வர்யா காதல் பாடல் இயக்குவதில் பிசியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.