இலங்கையில் வலுக்கும் போராட்டம் - நாட்டை விட்டு தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டம்..!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டை விட்டு தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும்,இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன.
ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.400க்கு விற்கப்பட்டு வருகிறது.சமையல் கியாஸ் சிலிண்டர் விலையே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தினமும் 13 மணி நேரம் மின்வெட்டு உள்ளிட்டவற்றால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே இல்லத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
போராட்டங்களின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
போராட்ட களத்தில் மக்கள் Go Home Gota என்ற கோஷங்களை முக்கியமாக எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு வெளியேறும் முடிவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக கட்டுநாயகா,ரத்மலானா விமான நிலையங்களில் இரண்டு விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் அதிபர் குடும்பமே அந்நாட்டை விட்டு தப்பித்துச் செல்லும் தகவல் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.