தயாரிப்பாளரால் அவமானம் - காரில் வந்து மிரள வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தை தயாரிப்பாளர் ஒருவர் கார் தராமல் ரோட்டில் உன்னை அலையவிடனும் என்று கூறிய நிலையில் அவர் வெளிநாட்டு காருடன் வந்து மிரள வைத்தது குறித்த செய்தி பாரக்கலாம்.
தாயாரிப்பாளரிடம் சம்பளம் கேட்ட ரஜினி
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்ப கட்டத்தில் நடத்துனராக இருந்து வந்த நிலையில், இயக்குநர் பாலசந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தான் வாங்கிய முதல் கார் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தனது 16 வயதினிலே படம் ரிலீசாகும் முன்பு, AVM ஸ்டுடியோவில் ஒரு முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தான் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்தை நடிக்க கமிட் செய்துள்ளார்.
அப்போது ரஜினி அவரிடம் தனக்கு 10 ஆயிரம் சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இறுதியில் பேச்சுவார்த்தைப் நடத்தி ரூ.6 ஆயிரம் சம்பளமாக தருவதாக அந்த தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். இதற்கு ஓகே சொன்ன ரஜினி தனக்கு அதில் ஆயிரம் ரூபாயை மட்டும் அட்வான்ஸாக கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்.
அவமானப்படுத்திய தயாரிப்பாளர்
அதை மறுநாள் தருவதாகவும் அந்த தயாரிப்பாளர் கூறி ரஜினியை அனுப்பி வதை்துள்ளார். மறுநாள் தராததால் ரோட்டுக்கடையில் இருந்து போன் போட்டு பேசிய ரஜினியிடம் ஷுட்டிங்கிற்கு வரும் போது தருவதாக கூறியுள்ளார்.
ஷுட்டிங் ஆரம்பிக்கும் போது நடிகர் ரஜினி தயாரிப்பாளரிடம் ஆயிரம் ரூபாய் எப்போ தருவீங்க என கேட்டுள்ளார். அந்த அட்வான்ஸ் பத்தை தந்தால் தான் பேக் அப் போடுவேன் என சொல்லிவிட்டாராம் ரஜினி.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தயாரிப்பாளர் ரஜினியை பார்த்து ‘ஏண்டா நாலு அஞ்சு படம் தான் பண்ணிருக்க, பணம் கொடுக்கலேனா மேக்கப் போட மாட்டியா. உன்னமாதிரி எத்தனை பேர நான் பாத்திருக்கேண்டா. உன்னெல்லாம் ரேட்ல அலைய விடனும் டா. கேரக்டரும் கிடையாது, ஒன்னும் கிடையாது போடானு’ சொல்லிட்டாராம்.
கார்ல கூட்டிட்டு வந்த மாதிரி கார்லயே போய் இறக்கி விடுங்கனு கேட்டாராம் ரஜினி. அதற்கு காரெல்லாம் கிடையாது, அதுக்கெல்லாம் வாடகை கொடுக்கனும், நீ நடந்தே போனு சொல்லி ரஜினியை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாராம் அந்த தயாரிப்பாளர்.
வெளிநாட்டு காரில் வந்து மிரள விட்ட ரஜினி
அப்போது நடிகர் ரஜினி இந்த கோடம்பாக்கத்தில் ரோட்ல வெளிநாட்டு கார்ல வந்து ஏவிஎம் ஸ்டூடியோல வந்து அந்த தயாரிப்பாளர் முன்னாடி கால்மேல கால்போட்டு உட்காரலேனா நான் ரஜினிகாந்த் இல்லை என சபதம் எடுத்துள்ளார்.
இதையடுத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து அதன்மூலம் வந்த வருமானத்தை வைத்து 2 ஆண்டுகளில் இட்டாலியன் ஃபியட் (Italian Fiat) என்கிற வெளிநாட்டு காரை 4.5 லட்சத்துக்கு வாங்கி உள்ளார்.
அது வெளிநாட்டு கார் என்பதால் அதற்காக ஒரு வெளிநாட்டு டிரைவரையும் வேலைக்கு வைத்து மறுநாள் காலை 8 மணிக்கு விட்றா வண்டிய ஏவிஎம்-க்குனு சொன்னேன். என்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளரின் கார் எங்கு நின்றதோ, அங்கேயே எனது காரையும் நிற்க வைத்து, கீழ இறங்கி வண்டி மேல ஸ்டைலா சாஞ்சு நின்னுகிட்டே அந்த தயாரிப்பாளர் முன் 2 சிகரெட் அடிச்சேன். அப்போ அங்கு கூட்டமே கூடிருச்சு” என்று தான் வாங்கி முதல் கார் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ரஜினி.