தக்காளி விலை கிடு கிடு உயர்வு - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
Tomato
Chennai
By Thahir
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.60 வரை உயர்ந்துள்ளது.
தக்காளி விலை கிடு கிடு உயர்வு
தமிழகம், பெங்களூர், மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளது.
வழக்கமாக 90 வானங்களில் வரும் தக்காளி தற்போது 40 இருந்து 45 வாகனங்களில் மட்டுமே வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான தக்காளியின் விலை ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனையாகிறது.
அண்டை மாநிலங்களில் மழை நீடித்தால் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளியின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலை : ஈபிடிபி, இராணுவமே காரணம்..! சிவாஜிலிங்கம் பகிரங்க குற்றச்சாட்டு IBC Tamil
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan