குழந்தைகளை குறைவா பெத்துக்கிட்டா சுற்றுச்சூழலுக்கு நல்லதா ? கொந்தளித்த எலான் மஸ்க்

Elon Musk
By Irumporai May 23, 2022 12:48 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் சமீபகாலமாக தனது ட்விட்டர் பதிவின் மூலம் ஹாட் டாப்பிக் ஆனார்,

இந்த நிலையில் தற்போதுட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முன்னைப்பில் இருந்த மஸ்க் ட்விட்டரில் 5 சதவீத போலிக்கணக்குகள் இருப்பதாக தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளார்.

தற்போது, ட்விட்டர் மற்றும் தொழில்நுட்பங்களில் இருந்து சற்று விலகி மக்கள் மத்தியில் பரவி வரும் குறைந்த குழந்தைகளே இந்த சுற்றுசூழலுக்கு நல்லது. அதிக குழந்தைகள் வேண்டாம் என்ற தவறான கருத்துக்கு எலோன் மஸ்க் தனது வீடியோ மூலம் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவில் :

குறைந்த குழந்தைகளே சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று சிலர் நினைக்கிறார்கள். மக்கள் தொகையை இரட்டிப்பாக்கினாலும் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும். ஜப்பானில் மிகக் குறைவான பிறப்பு விகிதம் இருந்தது.

நாகரீகத்தைப் பேணுவதற்கு குழந்தைகளைப் பெறுவது அவசியம். நாகரீகத்தை ஒன்றும் செய்ய விட முடியாது” என்று கூறியுள்ளார். மேலும், இந்த தாவரன கருத்தை சரி என்று நினைப்பது முட்டாள் தானம் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மஸ்கின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.