அந்த மனசு இருக்கே... வாகன ஓட்டிக்கு பெட்ரோல் போட காசு கொடுத்த காவலர்... - வைரலாகும் வீடியோ
வாகன ஓட்டிக்கு பெட்ரோல் போட காசு கொடுத்த காவலரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாகன ஓட்டிக்கு பெட்ரோல் போட காசு கொடுத்த காவலர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வாகனத்தில் வந்த இருவர் காவலர் ஒருவரை ப்ராங் செய்வதற்காக, சார் எங்களிடம் பெட்ரோல் போட சுத்தமா காசு இல்லை.. ஒரு 50 ரூபாய் கொடுங்க.. என்று கேட்கின்றனர். அதற்கு அந்த காவலர் சுத்தமா காசு இல்லையப்பா... என்று கேட்கிறார். அதற்கு ஆமாம்... சார்.. சுத்தமா காசு இல்லை என்று சொன்னதும், உடனே தன் பர்சில் இருந்த 50 ரூபாய் எடுத்து கொடுக்கிறார்.
உடனே அந்த வாகன ஓட்டிகள் இல்லை சார்.. சும்மா ப்ராங் செய்தோம் என்று சொல்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த காவலரின் மனசை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -