தொட்டால், நுகர்ந்தால் 20 நிமிடத்தில் மரணம்தான்... - அச்சுறுத்தும் இங்கிலாந்து The Poison Garden - ஆச்சரியத் தகவல்

By Nandhini Jul 11, 2022 10:11 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

The Poison Garden

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆல்விக் என்ற தோட்டத்தில் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய 100 க்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த தோட்டத்தை The Poison Garden என்று அழைக்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள இத்தோட்டத்தை பார்வையிட சுமார் பல நூற்றுக்கணக்கானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த Poison Garden உலகிலேயே மிக கொடிய ஆபத்தான தோட்டமாக கருதப்படுகிறது. இத்தோட்டத்தை பார்வையிட வேண்டும் என்றால் தனியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரும்பு கேட்டின் மேல் ஆர்ச் வடிவில் உள்ள பலகையில் The Poison Garden என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

The Poison Garden

ஆச்சரியத் தகவல்

இத்தோட்டத்தின் வலது, இடது என இரும்பு கேட்களிலும் ஆபத்தை குறிக்கும் வகையில் மண்டை ஓடுகளின் படங்கள் தொடங்கவிடப்பட்டுள்ளது.இத்தோட்டத்தில் உள்ள பூக்களை யாரும் தொடக்கூடாது. மேலும், அந்த பூக்களின் வாசனையை யாரும் நுகர்ந்து பார்க்கக் கூடாது. இந்த தடையையும் மீறி சிலர் பூக்களை நுகர்ந்து பார்த்து மயக்கம் கூட அடைந்துள்ளனர்.

The Poison Garden

6 லட்சம் பேர் வருகை

இந்தத் தோட்டத்தில் மனித உயிர்களை கொல்லக் கூடிய கொடிய செடிகள் உள்ளது. இதுவரை இந்த விஷ தோட்டத்தை ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் பார்வையிட்டு வருகிறார்கள். உலகின் மிகக் கொடிய நச்சு தாவரம் என கின்னஸ் சாதனை படைத்த ரிசின் செடியும் இங்கு இருக்கிறது.

இத்தோட்டத்தில் உள்ள yew tree எனப்படும் விஷச் செடியை சாப்பிட்டால், சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே ஒருவர் இறந்து விடுவார். மார்பக புற்றுநோய்க்கு மருந்தாக கொடுக்கும் taxol எனும் மருந்து இத்தோட்டத்தில் உள்ள மரத்திலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது. 

The Poison Garden

The Poison Garden