தமிழகம் வந்த பிரதமருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை - ஆளுநரிடம் அண்ணாமலை புகார்

BJP R. N. Ravi Governor of Tamil Nadu Narendra Modi K. Annamalai
By Thahir Nov 29, 2022 08:24 AM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது பிரதமருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

the-pm-was-not-given-adequate-security-annamalai

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றார்.

மேலும் பிரதமர் வருகையின் போது மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய பாதுகாப்பு படையினர் மாநில அரசிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் தறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மத்திய அரசின் கனவு திட்டமான வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை பகுப்பாய்வு செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை.

சட்டம் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது ஆளுநரின் கடமை. ஆளுநர் வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என்று பேசினார்.