தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம் விபத்து- தரையிறங்கும்போது என்ன நடந்தது?
பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துகுள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம்
மினியாபோலிஸ் இருந்து டொராண்டோ நோக்கி டெல்டா ஏர்லைன்ஸ் விமானமான மிட்சுபிஷி CRJ-900LR என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில் 4 பணியாளர்கள் உட்பட 80 பேர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2:15 மணியளவில் டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
மேலும் இதில் பயணம் செய்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதனையடுத்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.